தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவிக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்துள்ளதாக ரவி தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. ஆனால் தனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஆர்த்தி குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜெயம் ரவி மற்றும் கென்னிஷா ஆகிய இருவரும் ஒரே நிறத்தில் ஆடையணிந்து ஒன்றாக வந்து கலந்துகொண்டது, அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளது. இதன் மூலம் அவர்களின் காதல் கிசுகிசு மீண்டும் உயிர்க்கொள்ள ஆரம்பித்துள்ளது.