கருணாநிதி 4ம் ஆண்டு நினைவு நாள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி!
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (08:43 IST)
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி திமுகவினர் சென்னை கடற்கரை சாலையில் அமைதி பேரணி சென்றனர். அதை தொடர்ந்து மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. 40 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.