நடிகர்களை எச்சரித்த ஏ ஆர் முருகதாஸ்?

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (12:01 IST)
சர்கார் படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சில வருடங்களாக படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் களத்தில் இறங்கி பிரம்மாண்டமாக சர்கார் தயாரித்து வருகிறது.இப்படம் தீபாவளி வெளியீடாக வர இருக்கிறது. துப்பாக்கி, கத்தி வெற்றியைத் தொடர்ந்து விஜய் முருகதாஸ் இணையும் மூன்றாவது படமான சர்கார் மீது பெருத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ரிலீசுக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில் இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் நடிகைகள் பல வலைதள சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்து சர்கார் படத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதனால் படம் பார்க்கும் போது சுவாரசியம் குறைந்து விடும் என நினைக்கும் இயக்குனர் முருகதாஸ் தனது டிவிட்டர் மூலம் சர்கார் படத்தில் நடித்த நடிகர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதில் ’சர்கார் படத்தில் பலபேர் தங்கள் உழைப்பைக் கொட்டியுள்ளனர். சில நடிகர்கள் தன்னிச்சையாக பேட்டிகளைக் கொடுத்து வருகின்றனர். இது நியாயமான செயல் இல்லை. இனிமேல் எங்களுக்கு தெரிவிக்காமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் காட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்