பாலிவுட்டில் இருந்து விலகிய அனுராக் காஷ்யப்.. இனி தென்னிந்திய திரைப்படங்கள் தான்..!

Mahendran

வியாழன், 6 மார்ச் 2025 (15:41 IST)
பாலிவுட் திரையுலகின் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப், திடீரென இனி பாலிவுட் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து, அவர் தென் இந்திய படங்களில் மட்டும் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனுராக் காஷ்யப், அதன் பின்னர் விடுதலை 2, லியோ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், தற்போது அவர் பாலிவுட் திரையுலகிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாலிவுட் திரைப்படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்ட வேண்டும் என்பதற்காக, மிக மோசமான நச்சுத்தன்மை கொண்ட கதைகள் தயாரிக்கப்படுகின்றன என்று கடுமையாக காஷ்யப் விமர்சித்திருந்தார். இதற்காக  திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், திடீரென அவர் பாலிவுட்டிலிருந்து விலகி மும்பையில் இருந்தே வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
 
தற்போது, அவர் பெங்களூரில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் இனிமேல் தமிழ் உள்பட தென்னிந்திய படங்களில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்