மலை உச்சிக்கு பயந்து ஷூட்டிங்கை விட்டு தலைதெறிக்க ஓடிய நடிகை

செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (16:34 IST)
மலை உச்சியில் நடிக்க பயந்து நடிகை யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
அவளுக்கென்ன அழகிய முகம் என்ற படத்தை ஏ.கேசவன் இயக்கி வருகிறார். இதில் நடிகை அனுபமா பிரகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று கொடைக்கானல் மலை உச்சியில் நடைபெற்றுள்ளது.
 
மலை உச்சியில் அனுபமா நடனம் ஆடும் காட்சியை படமாக்கியுள்ளனர். படப்பிடிப்பு இடையே நடிகை தனது அறைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். இதனால் படக்குழுவினர் நடிகை வருகைக்காக காத்திருந்துள்ளனர்.
 
வெகு நேரம் ஆகியும் நடிகை வரவில்லை. அவரது அறைக்கு சென்ற பார்த்தபோது படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். நடிகை அறையை விட்டு ஓடிவிட்டார். மலை உச்சியில் நடிக்க பயந்து யாரிடமும் சொல்லாமல் டெல்லி உள்ள தனது வீட்டுக்கே விமானம் மூலம் சென்றுவிட்டார்.
 
இந்த சம்பவம் படக்குழுவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் படத்தின் தயாரிப்பாளர் டெல்லி சென்று நடிகையிடம் பேசி அழைத்து வந்து படப்பிடிப்பை தொடங்கினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்