தடையை வென்ற ப்ளு சட்ட மாறனின் ஆண்டி இந்தியன்! விரைவில் ரிலீஸ்!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (10:38 IST)
பிரபல விமர்சகரான நீலசட்டை மாறன் இயக்கியுள்ள ஆண்டி இந்தியன் திரைப்படம் சென்ஸார் பிரச்சனைகளில் சிக்கியுள்ளது.

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ’ஆண்டி இந்தியன்’ என்ற திரைப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என சென்சார் அதிகாரிகள் கூறியதாக வெளியில் தகவல் வெளிவந்துள்ளது. ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் நரேன், ராதாரவி உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’ஆண்டி இந்தியன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்துவிட்டு சர்ச்சைக்குரிய காட்சிகள் படம் முழுவதும் இருப்பதால் இந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என்று கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதையடுத்து மறு சென்ஸாருக்காக படத்தை அனுப்பும் முடிவில் படக்குழுவினர் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். இந்நிலையில் ரிவைசிங் கமிட்டியில் படத்தைப் பார்த்தவர்கள் படத்தில் 38 இடங்களில் கட் சொல்லியும், படத்தின் பெயரான ஆண்ட்டி இண்டியன் என்பதை மாற்ற வேண்டும் என சொல்லியும் அப்படி செய்தால் மட்டுமே சான்றிதழ் தரமுடியும் என சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

வழக்கு இப்போது படக்குழுவினருக்கு சாதகமாக கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த வித கட்டும் இல்லாமல் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதனால் படத்தை விரைவில் ரிலீஸ் செய்யும் முயற்சியில் படக்குழுவினர் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்