கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை: மருத்துவர்கள் கைவிட்டதாக தகவல்!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (16:02 IST)
கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை: மருத்துவர்கள் கைவிட்டதாக தகவல்!
ஹாலிவுட் நடிகை ஒருவர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் அவர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கைவிட்டதாக வெளிவந்திருக்கும் செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகை அன்னே ஹெச் என்பவர் சமீபத்தில் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த கார் விபத்துக்குள்ளானது. கார் மோதிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்ததாகவும் இதனை அடுத்து தீக்காயத்துடன் படுகாயம் அடைந்த நடிகை அன்னே ஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
 இந்த நிலையில் அவருக்கு மூளையில் தீவிர காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அவருடைய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்