அனுபவித்து , ரசித்து மியூசிக் போடும் இமான் - அட்டகாசமாக உருவாகும் "அண்ணாத்த" தீம் பாடல்!

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2020 (13:22 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த  படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் சதிஷ், சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதற்கிடையில் அண்மையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. அண்மையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள இப்படத்தின் டைட்டில் "அண்ணாத்த" என்று cast and crew குறித்த தகவல் அண்மையில் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் இசையமைப்பாளர் டி இமான் அண்ணாத்த படத்திற்காக தீவிரமாக வேளையில் இறங்கியுள்ளார். அதன் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ள இமானை ரஜினி ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்