பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த அருண் விஜய் படம்… தீபாவளிக்கு ரிலீஸ்!

திங்கள், 27 செப்டம்பர் 2021 (13:15 IST)
நடிகர் அருண் விஜய் இயக்குனர் ரத்தின சிவா இயக்கிய திரைப்படம் வா டீல் பல ஆண்டுகளாக ரிலீஸாகாமல் கிடப்பில் போடப்பட்டது.

அருண்விஜய், கார்த்திகா நடிப்பில் பல வருடங்கள் முன்பு தயாரான படம், வா டீல். ரத்தின சிவா இயக்கிய படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. ரத்தின சிவா தனது பெயரை மாற்றி, விஜய் சேதுபதியை வைத்து, றெக்க படத்தை இயக்கி வருகிறார். வா டீல் படத்தை ஜே.எஸ்.கே நிறுவனம் வாங்கியுள்ளது.

ஆனால் அவர்களாலும் படத்தை குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்நிலையில் இப்போது அருண் விஜய்யின் மார்க்கெட் சிறப்பாக இருப்பதால் இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்