வெளிமாநிலம் & வெளிநாடுகளில் அண்ணாத்த வசூல் நிலவரம்!

சனி, 6 நவம்பர் 2021 (17:58 IST)
அண்ணாத்த திரைப்படம் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியான நிலையில் இந்த படத்திற்கு முன்னணி விமர்சகர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி நேற்றைய முதல் நாளில் இந்த படம் சுமார் 35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் எதிர்மறை விமர்சனங்களை சமாளிக்கவே இதுபோல வசூல் சாதனைகளை இட்டுக்கட்டி பரப்புவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அண்ணாத்த திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றுள்ளதாம். அதனால் இரண்டாம் நாள் முதல் ரசிகர்களின் வருகை பாதிக்கு பாதியாக குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்