’அண்ணாத்த’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

வெள்ளி, 5 நவம்பர் 2021 (13:37 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு ஒரு சில விமர்சகர்கள் கலவையான விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர் 
 
ஆனால் குடும்ப ஆடியன்ஸுக்கு இந்த படம் மிகவும் பிடித்து உள்ளதாகவும் சென்டிமென்ட் படம் ரசிக்கும் ரசிகர்கள் இந்த படத்தை ரசித்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ’அண்ணாத்த’ திரைப்படம் ரூ.35.21 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் அதிகபட்சமாக விஜயின் சர்கார் திரைப்படம் முப்பத்தி இரண்டு கோடி வசூல் ஆன நிலையில் அந்த வசூலை முறியடித்து 35 கோடிக்கு மேல் ’அண்ணாத்த’ திரைப்படம் வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதுமட்டுமின்றி இன்று இரண்டாவது நாளிலும் இந்த படத்திற்கு மிக அதிகமான வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி ’அண்ணாத்த’ திரைப்படம் மிகப்பெரிய வசூலை செய்து உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்