அனிருத் இசையில் ஹீரோவாக களமிறங்கும் பிக்பாஸ் தர்ஷன் - வேற லெவல் அப்டேட் இதோ!

Webdunia
சனி, 16 மே 2020 (11:06 IST)
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பல போட்டியாளர்களுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு சாதாரணமாக கிடைத்து விடும். பெரும்பாலான போட்டியாளர்கள் தாங்கள் விரைவில் முன்னேற வேண்டும் என நினைத்து தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

அந்தவகையில் மூன்றாவது சீசனில் பங்கேற்று மக்களிடம் நல்ல பெயரை பெற்றவர்களுள் ஒருவர் தர்ஷன். மக்களின் ஒட்டு அதிக அளவில் பெற்று சக போட்டியாளர்களை விட ஒரு படி முன்னிலை வகித்து வந்த தர்ஷன் கடைசி நேரத்தில் பிக்பாஸில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டார். பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் நடிகை சனம் ஷெட்டியை காதலித்துவிட்டு திருமணம் செய்துகொள்கிறேன் என கூறி ஏமாற்றி விட்டதாக பெரிய சர்ச்சையில் சிக்கினார்.

அந்த பிரச்சனைகளில் இருந்து முழுவதுமாக வெளியில் வந்த தர்ஷன் பின்னர் தனது கேரியரில் கவனத்தை செலுத்தி தொடர்ந்து படங்களில் நடிக்க முயற்சித்து வந்தார். அவருக்கான சரியான இப்போது அமைந்துள்ளது. ஆம், புதுமுக இயக்குனர் ஒருவரின் படத்தில் ஹீரோவாக தர்ஷன் கோலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறாராம். இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், தமிழ் சினிமாவின் தற்போதைய ராக்ஸ்டார் அனிருத் தான் இந்த படத்திற்கு இசையமைக்கிறாராம். ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பாக கருணாமூர்த்தி தயாரிக்கும்  இந்த படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் துவங்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்