தனுஷ் படத்தில் பெயர் இருந்தாலும் இசையமைக்க மாட்டார் அனிருத்

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2016 (11:19 IST)
தனுஷ் - அனிருத் இடையிலான சொல்லப்படாத மோதல் காரணமாக தனுஷ் படங்களில் இப்போதெல்லாம் அனிருத் இடம்பெறுவதில்லை.


 
 
இந்நிலையில், தனுஷ் தயாரித்து நடிக்கும் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் இசையமைப்பாளர்கள் என ஷான் ரோல்டன், அனிருத் என இருவர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
 
வேலையில்லா பட்டதாரிக்கு அனிருத் இசையமைத்திருந்தார். அதில் நடித்த ரகுவரன் கதாபாத்திரத்தைதான் தனுஷ் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். அதனால், வேலையில்லா பட்டதாரியில் அனிருத் போட்ட சில பின்னணி இசைக்கோவைகளை இரண்டாம் பாகத்தில் பயன்படுத்த உள்ளனர்.
 
அதன் காரணமாகவே அவரது பெயர் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ளதே தவிர, அப்படத்தில் அனிருத் பணியாற்றப் போவதில்லை.
 
அதானே பார்த்தோம்.
அடுத்த கட்டுரையில்