சமீபத்தில் அவர் நடிப்பில் போலா ஷங்கர், லூசிபர் ரீமேக், ஆச்சார்யா என அனைத்துப் படங்களும் தோல்விப் படங்களாக அமைந்தன. இதனால் இப்போது சிரஞ்சீவி அடுத்தடுத்து இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். அனில் ரவிபுடி மற்றும் ஸ்ரீகாந்த் ஒடேலா ஆகிய இரண்டு இளம் இயக்குனர்கள் அடுத்தடுத்து சிரஞ்சீவியை இயக்கவுள்ளனர்.
இந்நிலையில் நானி தயாரிப்பில் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபகாலமாக தமிழ் மொழி தாண்டியும் அனிருத் பிற மொழிப் படங்களில் பணியாற்ற தொடங்கியுள்ளார். தெலுங்கில் ஜெர்ஸி மற்றும் தேவரா ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.