லியோ படத்துக்காக 17 தீம் இசைத்துணுக்குகளை உருவாக்கிய அனிருத்?

செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (16:05 IST)
தமிழில் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் லோகேஷ் கனகராஜ். கைதி, விக்ரம் மூலமாக இவர் உருவாக்கியுள்ள லோக்கிவெர்ஸுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில் அக்டோபர் 19 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீடு விரைவில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சென்னை அல்லது மலேசியாவில் ஆடியோ வெளியீடு நடக்கும் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்காக அனிருத் 17 தீம் இசைத்துணுக்குகளை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் விஜய், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் என பல நடிகர்கள் நடிப்பதால் இத்தனை தீம் மியூசிக் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்