தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ராகவா லாரன்ஸ். இவர், சினிமாவின் டான்ஸ்ராக இருந்து, நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக பன்முக கலைஞராக இருந்து வருகிறார்.
இவர், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், குழந்தைகளுக்கு தன் டிரஸ்டின் மூலம் உதவி செய்து வருகிறார்.
இதற்கு அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது டிரஸ்டிற்கு பணம் அனுப்பி வந்த நிலையில், சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில், இனிமேல் யாரும் என் டிரஸ்டிக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
இதனால் அவரது ரசிகர்களும், மக்களும், சமூக ஆர்வலர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இதுபற்றி இன்று ராகவா லாரன்ஸ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில்,'' நான் டான்ஸராக இருந்தபோதே மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்து வந்தேன். குழந்தைகளுக்கு ஓபன் ஹார்ட் சர்சரி என்று பல உதவி செய்தேன்… அப்போதே கஷ்டப்பட்டுத்தான் இதைச் செய்தேன். இப்போது நான் ஹீரோவாகி விட்டேன். முதலில் வருடத்திற்கு ஒரு படம் பண்ணினேன். இன்று வருடத்திற்கு 3 படங்களில் நடிக்கிறேன்… நிறைய பணம் வருகிறது. அதனால் என் குழந்தைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்…என்னோடு இணைந்து நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் எனக்கு சந்தோஷம்…ஆனால் உங்கள் வீட்டிற்கு அருகில் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுங்கள் என்று தெரிவித்துள்ளார்.