ஜேசன் விஜய் - லைகா திரைப்படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவா? கோலிவுட்டில் பரபரப்பு..!

செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (07:39 IST)
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய்யின் மகன் ஜேசன் விஜய் இயக்கும் திரைப்படத்தின் ஒப்பந்தம் நேற்று வெளியானது என்பதும் இந்த ஒப்பந்தம் குறித்த அறிக்கையை லைக்கா நிறுவனம் வெளியிட்டது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் ஜேசன் விஜய் இயக்கும் திரைப்படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றும் ஹாலிவுட் பாணியில் இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி தான் ஹீரோ என்றும் கூறப்படுகிறது. 
 
மற்ற நடிகர் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிந்து விட்டதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்