ஆண்ட்ரியா வெளியிட்ட மாடர்ன் போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!

சனி, 12 பிப்ரவரி 2022 (20:35 IST)
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும், ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா, " தற்போது சிகப்பு நிற கவர்ச்சி உடையில் மாடர்னாக போஸ் கொடுத்து இணையவாசிகளின் கவனத்தை சிதற வைத்துள்ளார். ஆண்ட்ரியாவின் ஒல்லி பெல்லி அழகுக்கு லைக்ஸ் வாரி குவித்துள்ளனர் நெட்டிசன்ஸ். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்