இதெல்லாம் ஒரு போஸா....? பாத்ரூமில் வழுக்கி விழுந்தது போல் இருக்கு!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (18:11 IST)
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில், கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தற்ப்போது மாடியில் மல்லாக்க விழுந்து கிடப்பது போன்ற எக்ஸ்பிரஷனில் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்ப்பதற்கு பாத்ரூமில் வழுக்கி விழுந்தது போல் உள்ளதாக ஆளாளுக்கு கிண்டல் அடித்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

If you must pass out, do it in style

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்