தளபதி 64: வெயிட்டான ரோலில் கமிட் ஆன ஆண்ட்ரியா..!

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (12:06 IST)
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான விஜய் பிகில் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்கவிருக்கிறார். சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர்  நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் 2020ம் ஆண்டின் கோடைவிடுமுறை தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 
விஜய் கேங்ஸ்டராக நடிக்கவிருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இவர்களுடன் சாந்தனு பாக்யராஜ், ஸ்ரீமன், ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். . 
 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆண்ட்ரியா விஜய்யுடன் நடிப்பது இதுவே முதன்முறையாகும். வித்தியாசமான கதையை படமாக்குவதற்கு பெயர் போனவர் லோகேஷ் கனகராஜ்."கைதி" படத்திற்கு பிறகு இயக்கும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்