நடிகர் விஜயகாந்திற்கு நிச்சயம் பாராட்டு விழா நடத்தப்படும்- விஷால்

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (19:34 IST)
நடிகர் விஜயகாந்திற்கு  நிச்சயம் பாராட்டு விழா நடத்தப்படும் என்று நடிகர் சங்கப் பொதுச்செயலாளார்  விஷால் தெரிவித்துள்ளார்.

விஷால்   நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தில், விஷாலுக்கு ஜோடியாக ரிதுவர்மா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து,  செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா  ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார்  இசையமைத்துள்ளார். இந்த நிலையில், ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் மோஸன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

வித்தியாசமாக  உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

மோசன் போஸ்டர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஷால், நடிகர் சங்கக் கட்டடத்தின் பத்திரத்தை மீட்டது நடிகர் விஜயகாந்த். அந்த இடத்தில் அவருக்குப் பாராட்டு நடத்துவது சரியான அங்கீகாரமாக இருக்கும். ஓராண்டுக்குள் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, நிச்சயம் பாராட்டு விழா நடத்தப்படும் என்று நடிகர் விஷால்  இன்று அறிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தின் நடிக்கும்போது, உயிரைப் பணம் வைத்து நடித்துள்ளதாகவும், உடலில் 109 தையல் போட்டுள்ளதாகவும், இப்படத்தில் தான்   நவ ரசம் காட்டி நடித்திருந்தால், எஸ்.ஜே. என்னை விட அதிகமாக  நடித்துள்ளார் என்று அவரைப் பாராட்டினார்.
 

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்