பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் 80 வயதிலும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தனது அன்றாட நிகழ்வுகளை வெளியிட்டு எழுதி வருகிறார். இந்நிலையில் சில நாட்களாக அவர் எந்த பதிவையும் எழுதாத நிலையில் திடீரென நேற்று மருத்துவப் பிரச்சனை… அறுவை சிகிச்சை… அதனால் எதுவும் எழுத முடியவில்லை என ஒரு டிவீட்டைப் பகிர்ந்திருந்தார்.