ஷாருக்கான் ஜோடியாக நடிக்கும் தனுஷ் பட நடிகை!

செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (21:44 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் தனுஷ் படத்தில் அறிமுகமாகிய பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
தனுஷ் நடித்த ஆடுகளம் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி அதன் பின் ஒரு சில தமிழ் படங்களிலும் பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் நடிகை டாப்ஸி. இவர் தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்சி நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது 
 
டாப்ஸி ஏற்கனவே தற்போது கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உள்பட பல படங்களில் நடித்து வரும் நிலையில் ஷாருக்கானுக்கும் ஜோடியாக நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை ராஜ்குமார் ஹிரானி என்பவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்