கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் பல படங்கள் ரிலீஸுக்கு தயாராகியும் முடங்கியுள்ளன. இதனால் பல சிறு மற்றும் குறு பட்ஜெட் படங்கள் ஓடிடி பிளாட்பார்ம்களில் நேரடியாக ரிலிஸ் செய்யப்பட்டு வருகின்றன. இது திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், தயாரிப்பாளர்களுக்கு வேறு வழியில்லாத சூழலே நிலவி வருகிறது.
தமிழ் சினிமாவின் அதிக பட்ஜெட் படமான மாஸ்டர் படத்தையும் இதுபோல நேரடியாக ரிலீஸ் செய்ய அமேசான் ப்ரைம் நிறுவனம் தயாரிப்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இதே போல அஜித்தின் வலிமை படத்தையும் ரிலீஸ் செய்ய அமேசான் ப்ரைம் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்துவதாக இப்போது செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. ஆனால் பாதி மட்டுமே படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் வலிமை படக்குழு இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.