இந்நிலையில் பள்ளி கட்டணம் வசூலிக்க கூடாது என தமிழக அரசு விதித்துள்ள தடை குறித்து நீதிமன்றத்தில் தனியார் பள்ளிகள் சங்கம் மனு அளித்தன. அதன் மீதான விசாரணையில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை கட்ட பெற்றோர்களை வற்புறுத்த கூடாது என்றும், பெற்றோர்கள் தாமாக முன் வந்து கல்வி கட்டணத்தை வழங்கும் பட்சத்தில் வாங்க தடையில்லை என்றும் விளக்கியது.
இதனைத்தொடர்ந்து தனியார் பள்ளிகளில் 3 தவணைகளாக 75% கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. அதாவது தற்போது 25%, பள்ளிகள் திறக்கும் போது 25%, அடுத்த 3 மாதங்களுக்கு பின்னர் 25% என கட்டணத்தை வசூலிக்கலாம் என அரசு அறிவுறுத்தியது.
அதனப்டி தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது, 2020 - 2021 ஆம் ஆண்டின் 40% கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் ஆக்ஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வசூலிக்கலாம். இதன் பின்னர் மீதமுள்ள 35% கல்வி கட்டணத்தை 2 மாதங்களுக்கு பிறகு வசூலித்துக்கொள்ளாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.