சன் டிவியை அடுத்து ‘தளபதி 64’ஐ கைப்பற்றிய அமேசான்

வியாழன், 5 டிசம்பர் 2019 (16:46 IST)
ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து அந்த திரைப்படத்தை வியாபாரம் செய்வதற்கும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு போதும் போதுமென்றாகி விடும். ஆனால் தளபதி விஜய்யை பொருத்தவரை அவருடைய படம் பூஜை தொடங்கப்பட்ட நாளிலிருந்து வியாபாரமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் 

இந்த நிலையில் ’தளபதி 64’ படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு மட்டுமே முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப் பெரிய தொகை கொடுத்து சன்டிவி பெற்றது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இதனை அடுத்து தற்போது அமேசான் நிறுவனம் ’தளபதி 64’ படத்தின் டிஜிட்டல் உரிமையை மிகப் பெரிய தொகை ஒன்றை கொடுத்து பெற்று உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
அதுமட்டுமின்றி இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்ற முன்னணி நிறுவனம் ஒன்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தமிழக உரிமையை கைப்பற்ற ஒரு மிகப்பெரிய நிறுவனம் பேச்சுவார்த்தையை முடித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
மொத்தத்தில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு பாதி முடியும் முன்னரே அதன் மொத்த வியாபாரமும் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்