சும்மாவே இருக்கமாட்டீங்களா மேடம்...? உயிரை பணய வைத்து அமலா பால் செய்த காரியம்!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (14:42 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
 
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது.
 
அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் அவர் தற்போது அந்தரத்தில் தொங்கி Trapeze யோகா செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீப நாட்களாகவே சமந்தா இதோ போன்று கடினமான யோகாசனங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul (@amalapaul)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்