அமலா பால் தாக்கல் செய்தது போலி ஆவணமா?

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (12:31 IST)
போலி ஆவணத்தைத் தாக்கல் செய்ததால், நேரில் ஆஜராகுமாறு அமலா பாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 
சொகுசு கார் வாங்கி புதுச்சேரியில் பதிவுசெய்த விவகாரத்தில், வரி ஏய்ப்பு செய்ததாக அமலா பால் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், தான் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்றும், சட்டத்தின்படியே நடந்து கொண்டதாகவும் அமலா பால் தெரிவித்தார். இதுகுறித்து கேரள மாநிலம் எர்ணாகுளம் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். 
 
அமலா பால் கார் பதிவுசெய்த முகவரிக்கான ஒரிஜினல் ஆவணங்களுடன் ஆஜராகுமாறு அமலா பாலுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அமலா பால் சார்பில் அவருடைய வழக்கறிஞர் ஆஜரானார். ஆனால், அவர் தாக்கல் செய்த வீட்டு வாடகை ஒப்பந்தம் போலியானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கார் பதிவு செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்புதான் அந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால், வருகிற 10ஆம் தேதிக்கும் அமலா பால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது  வரியைச் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்