விஜயகாந்தை கொலை செய்தவர்களை கண்டுபிடியுங்கள்: பிரபல இயக்குனரின் இன்ஸ்டா பதிவு..!

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (17:37 IST)
விஜயகாந்தை கொலை செய்தவர்கள் கண்டுபிடிங்கள் என பிரபல இயக்குனர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
நேரம், பிரேமம், கோல்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர்  அல்போன்ஸ் புத்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதயநிதியை டேக் செய்து விஜயகாந்தை கொலை செய்தவர்களை கண்டுபிடிங்கள் என்று தெரிவித்துள்ளார்.  
 
ஏற்கனவே கருணாநிதி, ஜெயலலிதாவை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும் உங்களிடம் வேண்டுகோள் விடுத்தேன். இப்போது அந்த பட்டியலில் விஜயகாந்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.  
 
முதலமைச்சர் மு க ஸ்டாலின், கமல்ஹாசன் ஆகியோர்களை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. இதை அப்படியே விட்டுவிட்டால் அது உங்கள் வரை ஆபத்தாக அமையும். உங்களுக்கு கொலையாளிகளை கண்டுபிடிப்பது பெரிய வேலை அல்ல என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்