நடிகராக ரீ எண்ட்ரி கொடுக்கும் அல்போன்ஸ் புத்ரன்.. படக்குழு வெளியிட்ட அப்டேட்!

vinoth

திங்கள், 14 ஜூலை 2025 (08:24 IST)
’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவ்வளவு பெரிய வெற்றி பெற்ற திரைப்படத்துக்கு பிறகு  8 ஆண்டுகளாக அவர் எந்த படமும் இயக்காமல் கடைசியில் கோல்ட் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் தோல்வி படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர் இயக்கிய கிஃப்ட் என்ற திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே அவர் சினிமாவை விட்டே விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இப்போது அல்போன்ஸ் புத்ரன் நடிகராக பல்டி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ஷான் நிகாம் கதாநாயகனாக நடிக்க, உன்னி மகாலிங்கம் இயக்குகிறார். சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தில் சோடா பாபு என்ற கதாபாத்திரத்தில் அல்போன்ஸ் நடிப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே தான் இயக்கிய பிரேமம் படத்தில் ஒரு சிறு வேடத்தில் அல்போன்ஸ் புத்ரன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்