சூர்யா படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல தெலுங்கு நடிகர்

Webdunia
வெள்ளி, 20 ஜூலை 2018 (12:51 IST)
சூர்யா நடிக்கும் அடுத்த படமான 'சூர்யா 37' என்ற படத்தை பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் தொடங்கியது

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த பிரபல தெலுங்கு நடிகர் அல்லுசிரிஷ் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை அல்லு அர்ஜூன் தனது சமூகவலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

'சூர்யா 37' படத்தின் படப்பிடிப்பு தேதியும் தான் நடித்து கொண்டிருக்கும் இன்னொரு படத்தின் படப்பிடிப்பு தேதியின் கால்ஷீட்டும் ஒத்து வராததால் இந்த படத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக அல்லு சிரிஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். எனவே இந்த படத்தில் அல்லுசிரிஷூக்கு பதிலாக வேறொரு பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதே படத்தில் மோகன்லால், ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி ஆகிய பிரபல நடிகர்களும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்