சுதந்திர தின விழா பேரணியில் கலந்துகொள்ளும் அல்லு அர்ஜூன்

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (18:16 IST)
தெலுங்கு சினிமாவில் ஷ்டைலிஸ் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, ரூ.350 கோடி  வசூலீட்டி சாதனை படைத்தது.
 
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா -2 ஆம் பாகத்திலும் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பகத் பாசிலை  வைத்து இயக்கி வருவதாக சுகுமார் தெரிவித்தார்.
 
இந்த நிலையில்,  வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி அமெரிக்க நாட்டில்  நியூயார்க்  நகரில் சுதந்திர கொண்டாட்ட பேரணி நடக்கவுள்ளதாகவும், இதில், இந்தியக் கொடியை ஏந்தியபடி அல்லு அர்ஜூன் கலந்து கொள்ளவுள்ளார்.
 
இது இந்தியாவின் 75 வது சுதந்திர கொண்டாட்டம் என்பதால் இந்த விழா பிரமாண்டமாக நடக்கும் எனக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்