நடிகர் அஜித்தை தனுஷ் சந்தித்ததாகவும், தனுஷ்கூறிய கதை அஜித்துக்கு பிடித்து விட்டதாகவும், எனவே அஜித்தின் அடுத்த படத்தை தனுஷ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.
ஆனால் திரை உலக பிரமுகர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித் மற்றும் தனுஷ் சந்திப்பு இதுவரை நடக்கவே இல்லை என்றும், வரும் ஜூன் மாதம் தான் தனுஷிடம் அஜித் கதை கேட்பதாக கூறி இருக்கிறார் என்றும், இதுவரை வெளியான தகவல்கள் அனைத்தும் பொய் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஜித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தனுஷ் உங்களுக்காக ஒரு கதை வைத்திருக்கிறேன், நேரில் வந்து சொல்கிறேன் என்று கோரிக்கை விட்டதாகவும், தான் இப்போது கார் ரேஸில் பிஸியாக இருப்பதால் ஜூன் மாதம் கதை கேட்கிறேன் என்று அஜித் கூறியதாகவும் அதன் பிறகு தான் அவர் இட்லி கடை படத்தில் பிஸியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏனெனில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது ஆதிக் ரவிச்சந்திரன் தான் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்யும் அஜித் அனுமதி வழங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அஜித்தின் அடுத்த படம் எது என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே அந்த படத்தின் இயக்குனர் யார் என்பதும் தெரியவரும்.