கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் பேட்டி ஒன்றில், எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது, ஆனால் கடவுளை நம்புகிறவர்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பேன். எனக்கு புத்த வழிபாடு மிகவும் பிடிக்கும். அது மதம் சார்ந்ததல்ல என்றும், வாழ்வியலோடு கலந்தது என்றும், அதிலிருந்து நிறைய விஷயங்கள் கற்றுவருவதால் என்னை புத்த வழிபாட்டில் இணைத்துக்கொண்டேன் என்று கூறினார்.