எனக்கும் அஜித்துக்கும் இதில்தான் ஆர்வம் அதிகம்; அக்‌ஷரா ஹாசன்

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (16:04 IST)
எனக்கும் அஜித்துக்கும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம் என அக்‌ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.


 

 
சிவா இயக்கத்தில் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் அக்‌ஷரா ஹாசன். அஜித் நடித்துள்ள விவேகம் படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் விவேகம் குறித்து அக்‌ஷரா ஹாசன் கூறியதாவது:-
 
இயக்குநர் சிவா படத்தில் என் கதாபாத்திரம் குறித்து விவரித்தபோது எனக்கு பிடிந்திருந்தது. கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் கருவியாக என் கதாபாத்திரம் இருக்கும். அஜித்துடன் நடித்தது அருமையான அனுபவம். எங்கள் இருவருக்கும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம். அதனால் அதைப் பற்றி நாங்கள் அதிகம் பேசினோம் என்றார்.
அடுத்த கட்டுரையில்