மேடையில் அக்காள் மரணம்….தங்கையை மணந்த மாப்பிள்ளை !

Webdunia
சனி, 29 மே 2021 (22:38 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில்  திருமண மேடையிலேயே அக்காள் மரணம் அடைந்ததால், அவரது தங்கையைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டம் பர்தானாவில் உள்ள சமஸ்பூரில் திருமணம் நடைபெற்றது. அப்போது, மணமகன் மஞ்சேஷ்குமார், தன வருங்கால மனைவி சூரபியுன் அருகில் நின்றுகொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். அப்போது, மணப்பெண் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார்.

அங்கு வந்த மருத்துவர் மணமகள் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் எனக் கூறினார். இதைக் கேட்டு பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் மண்மகன் மற்றும் மணமகள் வீட்டர் இருவரும் கலந்துபேசி, மணமகன் மஞ்சேஷுக்கு சூரபியின் தங்கை நிஷாவை திருமணம் செய்து வைத்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்