'சந்திரமுகி 2’ உள்பட 8 படங்களின் ஓடிடி உரிமையை தட்டித்தூக்கிய பிரபல நிறுவனம்!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (14:30 IST)
அஜித் நடித்த ’ஏகே 62’ ராகவா லாரன்ஸ் நடித்த ’சந்திரமுகி 2’உள்பட 8 படங்களின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இது குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித் நடித்த ஏகே 62, ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2, கார்த்தி நடிக்கும் ஜப்பான், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜிகர்தண்டா 2,விக்ரம் பிரபு நடிக்கும் இறுகப்பற்று, ஜெயம் ரவி நடித்த இறைவன் மற்றும் விஷ்ணு விஷால் நடித்த வரும் ஆரியன் ஆகிய எட்டு படங்களின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது
 
அதுமட்டுமின்றி மேலும் சில முக்கிய பிரபல நடிகர்களின் படங்களின் டிஜிட்டல் உரிமையை வாங்க  பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்