விஜய்யைப் பாராட்டிய அஜித் பட நடிகர்

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (19:38 IST)
அஜித் படத்தில் வில்லனாக நடித்தவர், விஜய்யைப் பாராட்டியுள்ளார்.

 
அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸான படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடித்த இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் தயாரித்துள்ளது.
 
பிரிட்டன் 4வது தேசிய திரைப்பட விழாவில் இந்தப் படத்துக்கு, ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ விருது கிடைத்துள்ளது. இதற்காக பலரும் பாராட்டு தெரிவித்துவரும் நிலையில், அஜித்தின் ‘வேதாளம்’ படத்தில் வில்லனாக நடித்த கபிர் துகான் சிங்கும் விஜய் மற்றும் அட்லீயைப் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்