என்னப்பா குழப்புறீங்க… விடாமுயற்சி ரிலீஸ் தேதியில் நடந்த மிகப்பெரிய மாற்றம்!

vinoth

புதன், 11 செப்டம்பர் 2024 (09:08 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ளது. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் டிசம்பர் 20 ஆம் தேதிக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி விடாமுயற்சி திரைப்படம் கண்டிப்பாக தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது விடாமுயற்சி தீபாவளிக்கு வராது என்று பொங்கலுக்குதான் ரிலீஸ் ஆகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படித் தள்ளிப்போகும் பட்சத்தில் அஜித் நடித்து பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் என்ன ஆகும் எனக் கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்