அஜித் எங்களை தம்பி போல நடத்தினார்! 'வீரம்' நடிகர் பாலா

Webdunia
சனி, 11 மார்ச் 2017 (07:25 IST)
அஜித் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான 'வீரம்' படத்தில் அவரது தம்பிகளில் ஒருவராக நடித்தவர் நடிகர் பாலா. இவர் சமீபத்தில் மலையாள தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வீரம் படத்தில் நடித்தபோது அஜித்துடன் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்



 


அஜித் ஒரு சூப்பர் ஸ்டார், சிறந்த நடிகர் என்பதையெல்லாம் தாண்டி அவர் ஒரு மிகச்சிறந்த மனிதநேயம் மிக்கவர் என்பதாலே அவருக்கு ரசிகர்கள் குவிகின்றனர். அஜித்துக்கு தம்பியாக 'வீரம்' படத்தில் நடித்தபோது அவர் எங்களை உண்மையாகவே சொந்த தம்பி போலவே கவனித்து கொண்டார்

எங்களுடன் அதிக நேரங்கள் செலவு செய்து எங்களுடைய நிறைகுறைகளை கேட்டு பல அறிவுரைகள் செய்தார். அந்த படம் முடியும்போது நாங்கள் எல்லோரும் அஜித்தின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக மாறிவிட்டோம்' என்று கூறியுள்ளார்
அடுத்த கட்டுரையில்