அஜித் பட நடிகரின் அம்மா காலமானார் !

புதன், 14 ஜூலை 2021 (19:40 IST)
தென்னிந்திய சினிமாவில் 80, 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ரகுமான். இவர் நடிப்பில் வெளியான புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

அதன் பின்னர் பில்லா படத்தில் நடிகர் அஜித்திற்கு வில்லனாக நடித்து இரண்டாம் இன்னிங்ஸில் அசத்தினார்,. அதேபோல் துருவங்கள் பதினாறு உள்ளிட்ட தரமான படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ரகுமானின் தயார் சாவித்ரி இன்று உயிரிழந்துள்ளார். 84 வயதான ரகுமானின் தாயார் இன்று பெங்களூரில் மதியம் 3;30 மணியளவில் இயற்கை எய்தினார்.

கேரளாவைப்பூர்வீகமாகக் கொண்ட அவரது இறுதிச் சடங்கு நாளை கேரள மாநிலம் மலப்புறத்தில் உள்ள நீலம்பூரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் ரகுமானிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்