அஜித்குமாருக்கு அரசியலுக்கு வருகிறாரா? சுரேஷ் சந்திரா விளக்கம்

செவ்வாய், 1 மார்ச் 2022 (21:04 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் அரசியலுக்கு வரவுள்ளதாக பிரபல தனியார் ஊடகம்  நேற்று ஒரு தகவல் வெளியிட்ட நிலையில் இதை மறுத்து  நடிகர் அஜித்தின் மேனேஜர்  ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித் அரசியலுக்கு வரவுள்ளதாகவும் இத்தகவலை ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் தெரிவித்ததாக பிரபல தனியார் ஊடகம் நேற்று ஒரு தகவல் வெளியிட்டது.

உறுதிபடுத்தப்படாத இந்த செய்தியை மறுத்து,  நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில், மிஸ்டர் அஜித்குமார் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை. எனவே இது போன்ற பொய்யான   மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவதை தவிர்க்க  வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

"Mr Ajith kumar has got no intentions of venturing into politics and hence humbly requests the respected members of the media to refrain from encouraging such misleading informations".https://t.co/vILUFO8HCI

— Suresh Chandra (@SureshChandraa) March 1, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்