வலிமை திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
திங்கள், 28 பிப்ரவரி 2022 (20:56 IST)
அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த 24ஆம் தேதி ரிலீஸ் ஆன நிலையில் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
அஜித் நடித்த வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்த சர்ச்சைக்குரிய காட்சி இருப்பதாகவும் இதனை அடுத்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அனைத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த புகார் குறித்து விரைவில் காவல்துறையினர் விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வலிமை படத்தின் வசூல் ரூ 200 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென இந்த படத்தின் மீது புகார் அளிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.