தல அஜித்தின் 'விவேகம்' டிரைலர் விமர்சனம்

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (00:11 IST)
தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'விவேகம்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வரும் வியாழன் அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை தொடங்கிய அடுத்த வினாடியில் இந்த படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியாகியுள்ளது.



 
 
ஹாலிவுட் தரம் என்றால் உண்மையான ஹாலிவுட் தரம் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ள 'விவேகம்' டிரைலர். அதிரடி ஆக்சன் காட்சிகள், கைதட்டலை விடாமல் வரவழைக்கும் வசனங்கள் டிரைலரில் ஆங்காங்கே இருப்பதால் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவரும் வகையில் உள்ளது. குறிப்பாக 'நான் யார் என்பதை எப்போதுமே நான் முடிவு பண்றதில்லை, என் எதிர்ல நிக்கறவங்க தான் முடிவு பண்ணுவாங்க, என்ற வசனமும், 'போராடாம அவன் தூங்கவும் மாட்டான், சாகவும் மாட்டான், ஃபீனிக்ஸ் பறவை மாதிரி எரிக்க எரிக்க எழுந்து வர்றான்' என்ற வசனங்கள் புல்லரிக்க வைக்கின்றன
 
ஆக்சன் காட்சிகள் குறித்து சொல்லவே வேண்டாம். ரயில் சண்டை ஆகட்டும், பைக்கில் பறந்து அடிக்கும் வேகம் ஆகட்டும் தல அஜித் தூள் கிளப்புகிறார். சண்டைப்பயிற்சி ஹாலிவுட் படத்தில் கூட இந்த அளவுக்கு பிரமாண்டம் இருக்காது. அதேபோல் ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவைகளை விவரிக்க வார்த்தையே இல்லை. அனிருத்தின் பின்னணி அசர வைக்கின்றது. மொத்தத்தில் தமிழில் ஒரு ஹாலிவுட் படம் என்பதை விவேகம் உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்