தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. அஜித் மூன்று விதமான கெட்டப்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்துக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்காக முதல் நாள் (ஏப்ரல் 9) பிரீமியர் காட்சிகளைத் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்தது. ஆனால் இப்போது அந்த திட்டத்தைக் கைவிட்டு விட்டதாம். அதற்குக் காரணம் முதல் நாள் காட்சியின் போதே ரசிகர்கள் முக்கியமானக் காட்சிகளை எல்லாம் செல்போனில் படம்பிடித்து வெளியிட்டுவிட்டால் அடுத்த நாள் சஸ்பென்ஸ் போய்விடும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.