தமிழக சட்டமன்றத்தில் பேசி வரும் அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும் என கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், பட்ஜெட் மீதான விவாதங்கள் தமிழக சட்டமன்றத்தில் நடந்து வருகின்றன. இதில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
அவ்வாறாக பேசியபோது அமைச்சர் தங்கம் தென்னரசு “இந்தியாவில் சாதிய பாகுபாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு முற்றாக நிராகரிக்கும்” என பேசியுள்ளார்.
மேலும் “கைவினைப் பொருட்களை உருவாக்குவதற்காகவும், நவீன முறையில் செயலாற்றுவதற்காகவும் கலைஞர் கைவினைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்த திட்டத்தில் 7,897 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ரூ.28 கோடி மானியத்தோடு, ரூ.138 கோடி செலவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட உள்ளது” என அறிவித்துள்ளார்.
Edit by Prasanth.K