விஜய்க்காக போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள்: மதுரையில் கலக்கல்!!

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (16:00 IST)
அஜித் ரசிகர்கள் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என மதுரையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.  
 
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் சென்சாருக்கு செல்லும் என தெரிகிறது. 
 
வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை குறித்து தான் கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகி வந்தது. அதில் குறிப்பாக விஜய்யின் உடை குறித்து கேட்கப்பட்ட போது, நண்பர் அஜித் ஸ்டைலில் உடை அணியலாம் என கோட் அணிந்து வந்ததாக கூறியிருந்தார்.
 
இதனைத்தொடர்ந்து, அஜித் ரசிகர்கள் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என மதுரையில் போஸ்டர் ஒட்டியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
அந்த போஸ்டரில் நடிகர் விஜயை போன்று அவரது ரசிகர்களும் போட்டியாளரை நண்பனாக கருதினால் அழகாய் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்