வலிமை படத்தில் அஜீத்துக்கு டபுள் ஆக்சனா? இயக்குனர் விளக்கம்

வியாழன், 7 அக்டோபர் 2021 (22:10 IST)
அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து உள்ளதாக செய்திகள் இணைய தளங்களில் பரவி வருகிறது. இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் வினோத் இந்த படத்தில் அஜித் இரண்டு கெட்டப்புகளில் வருகிறார் என்பது மட்டுமே உண்மை என்றும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது தவறான தகவல் என்று கூறியுள்ளார் 
 
மேலும் அஜித்துக்கு இந்த படத்தில் ஜோடி எதுவும் கிடையாது என்றும் ரொமான்ஸ் காட்சிகள் கிடையாது என்றும் ஹுமா குரேஷி அவரது தோழியாக இந்த படத்தில் நடித்துள்ளார் என்று விளக்கம் அளித்துள்ளார்
 
இயக்குநர் எச் வினோத்தின் இந்த விளக்கத்தை அடுத்து அஜீத் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்