இந்நிலையில் இன்று துர்கை பூஜை மற்றும் நவராத்திரி வழிபாட்டிற்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “ஒவ்வொருவருக்கும் நவராத்திரி திருவிழா வாழ்த்துகள். வருகிற நாட்களில், ஜனனி மாதாவை பக்தியுடன் நாம் வழிபட வேண்டிய நாட்கள் வர இருக்கின்றன. இந்த நவராத்திரி திருவிழா ஒவ்வொருவரின் வாழ்விலும் வலிமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் வளம் ஆகியவற்றை கொண்டு வரட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.