இதில் விருதுநகரைச் சேர்ந்த பரமேஸ்வரி என்ற பெண்ணாக நடித்துள்ள காஜல், திருமணத்திற்கு முன்பே அவர் மட்டும் தனியாக பாரிஸ்க்கு ஹனிமூன் செல்கிறார். அங்கு அவருக்கு ஏற்படும் அனுபவங்களே படத்தின் கதை. ஏற்கனவே பாலிவுட்டில் கங்கனா ரனவத் நடிப்பில் வெளியான குயின் படத்தின் ரீமேக் தான் இந்த பாரிஸ் பாரிஸ். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. காஜலின் நடிப்பு ஆஹா அற்புதம் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா, கன்னட ரீமேக்கில் பருல் யாதவ், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படங்களின் டீசரும் நேற்று வெளியானது.